உள்ளூர் செய்திகள்

கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம்- ஓராண்டுக்குள் முடிக்க திட்டம்

Published On 2023-08-18 09:35 IST   |   Update On 2023-08-18 09:35:00 IST
  • 3 நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை, ஓராண்டுக்குள் முடிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
  • சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரெயில்கள் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பிரமாண்ட புறநகர் பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதில் வெளியூர் செல்லும் பஸ்களை நிறுத்தவும், பயணிகளுக்கும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமான பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரூ.20 கோடி செலவில் கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் 4 மாதங்களில் தொடங்க உள்ளது. புதிய பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வசதிக்காக புதிய ரெயில் நிலையம் அமைக்கப்படவுள்ளது.

3 நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை, ஓராண்டுக்குள் முடிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரெயில்கள், இந்த ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

முதற்கட்டமாக ரூ.40 லட்சம் நிதியை ரெயில்வே நிர்வாகத்திற்கு, சி.எம்.டி.ஏ வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News