உள்ளூர் செய்திகள்
பெரியபாளையம் அருகே பிரிட்ஜில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி
- வீரம்மாளை மீட்டு செங்குன்றத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள வாணியன் சத்திரம், அண்ணா நகர் பகுதியில் வசித்து வருவபர் சீனிவாசன். இவரது மனைவி வீரம்மாள் (வயது47). இவர்களது வீட்டில் உள்ள பிரிட்ஜில் மின்சாரம் கசிந்து இருந்தது. இதனை கவனிக்காமல் வீரம்மாள் பிரிட்ஜை திறந்தார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய வீரம்மாளை மீட்டு செங்குன்றத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.