உள்ளூர் செய்திகள்
தென்னிந்திய திருச்சபை சார்பில் நம்ம வீட்டு கல்யாணம்: விஜய் வசந்த் பங்கேற்பு
- திருமண நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
- மிக சிறந்த ஒரு சமூக சேவையை முன்னின்று நடத்திய சபைக்கு எனது நன்றியினை விஜய் வசந்த் தெரிவித்துக்கொண்டார்.
நாகர்கோவில்:
தென்னிந்திய திருச்சபை சார்பில் நாகர்கோவிலில் வைத்து ஏழு ஏழை பெண்களுக்கான திருமண நிகழ்ச்சி நடத்தி வைக்கப்பட்டது.
திருச்சபையின் பவள விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த "நம்ம வீட்டு கல்யாணம்" திருச்சபையின் சார்பில் ஏழு நலிவடைந்த குடும்பங்களை சேர்ந்த பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு திருச்சபையின் செலவில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
தென்னிந்திய திருச்சபை பேராயர் செல்லையா நடத்தி வைத்த இந்த திருமண நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மிக சிறந்த ஒரு சமூக சேவையை முன்னின்று நடத்திய சபைக்கு எனது நன்றியினை விஜய் வசந்த் தெரிவித்துக்கொண்டார்.