உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அருகே வாட்ஸ்அப்பில் சர்ச்சை பதிவு: வாலிபர் கைது

Published On 2022-07-18 10:47 IST   |   Update On 2022-07-18 10:47:00 IST
  • வாலிபர் வாட்ஸ்அப்பில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் ‘ஸ்டேட்டஸ்’ வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
  • மேலும் சர்ச்சையான வாசகங்களுடன் சிலருக்கு பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலான்குளம் குருக்கள்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் கண்ணன் (வயது 27).

இவர் தனது வாட்ஸ்அப்பில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் 'ஸ்டேட்டஸ்' வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சர்ச்சையான வாசகங்களுடன் சிலருக்கு பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

அவரது இந்த பதிவு அப்பகுதியில் வேகமாக பரவி உள்ளது. இதுகுறித்த தகவல் சின்ன கோவிலான்குளம் போலீசாருக்கும் தெரியவந்தது.

உடனே போலீசார் விசாரணை நடத்தி ரமேஷ் கண்ணனை கைது செய்தனர். இவர் மீது சங்கரன்கோவில் உள்ளிட்ட சில போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

கைதான ரமேஷ் கண்ணன் மீது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல், பீதியை ஏற்படுத்துதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News