உள்ளூர் செய்திகள்
மதுரவாயலில் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை
- மதுரவாயல், கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார்(வயது27).தொழிலாளி.
- மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போரூர்:
மதுரவாயல், கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார்(வயது27).தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 4நாட்களுக்கு முன்பு சித்ராவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது சித்ராவின் உறவினருடன் சதிஷ்குமாருக்கு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சித்ரா கணவருடன் கோபித்துக் கொண்டு செவ்வாப்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன வேதனை அடைந்த சதிஷ்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.