உள்ளூர் செய்திகள்

வானமுட்டி பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த தமிழிசை சவுந்தரராஜன்.

கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோவிலில் தெலுங்கானா கவர்னர் சாமி தரிசனம்

Published On 2023-10-09 15:16 IST   |   Update On 2023-10-09 15:16:00 IST
  • காவிரி பிரச்சனையை தமிழக அரசு சட்ட ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் கையாள வேண்டும்.
  • தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு தமிழக முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவிப்பதில்லை.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை ஊராட்சி கோழிகுத்தி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வானமுட்டி பெருமாள் கோயில் எனப்படும் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளது.

இக்கோயிலில் ஒரே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் வானமுட்டி பெருமாள் அருள்பாலி க்கிறார்.

இக்கோவிலில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

முன்னதாக ஆலய நிர்வாகம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்க ளிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியபோது :-

ஆன்மீகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

காவிரி பிரச்சனையை தமிழக அரசு சட்டரீதியாகவும் நட்பு ரீதியாகவும் கையாள வேண்டும், தமிழக முதல மைச்சர் கொள்கை கூட்டணி என கூறுகிறார்.

ஆனால் அனைவருக்கும் தண்ணீர் சமம் என்ற கொள்கைக்கு ஏற்றார்போல் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

சென்ற காலங்களில் இருந்த முதலமைச்சர் போல் தமிழக முதல்வர் தண்ணீர் பெற்று தருவதற்கு தீவிரமான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றார்.

தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவிப்பதில்லை.

இதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியின் போது மயிலாடுதுறை பொறுப்பு ஆர்.டி.ஓ. அர்ச்சனா, தாசில்தார் மகேந்திரன், மற்றும் பிஜேபி கட்சி தலைவர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News