உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அ ருகே கச்சிராயபாளையம் சாலையில் தொடரும் வழிப்பறி கொள்ளை பொதுமக்கள் அச்சம்

Published On 2023-09-12 14:56 IST   |   Update On 2023-09-12 14:56:00 IST
  • இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது.
  • சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் போலீஸ் நிலைய எல்லை க்குட்பட்ட கள்ளக்குறிச்சி-கச்சிராயபாளையம் சாலை யில் நல்லாத்தூர் பெட்ரோல் பங்க் - தனியார் பள்ளிக்கு இடையே இடையே இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. இங்குள்ள புளிய மரத்தின் பின்புறம் மறைந்து நிற்கும் மர்ம நபர்கள் சாலைக்கு வந்து கையை காட்டி வாகனத்தை நிறுத்துகின்றனர். வாகன ஓட்டிகளை திசை திருப்பி, அவர்களை தாக்கி பணம், பொருள் பறிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கும் வழிப்பறி நடந்துள்ளது.

கள்ளக்குறிச்சி-கச்சிரா யபாளையம் சாலையில் இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 3 மணிக்குள் மர்ம நபர்களின் கைவரிசை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. எனவே, இந்த சாலையில் ரோந்து பணிக்காக கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும். அவர்கள் மூலம் வழிப்பறி சம்பவங்களை தடுத்து, பொதுமக்களின் அச்சத்தையும், பீதியையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News