உள்ளூர் செய்திகள்
மின் கம்பி உரசியதால் லாரி தீ பிடித்தது
- ரூ. 7 லட்சம் மதிப்புள்ள வைக்கோல் நாசமானது
- போலீசார் விசாரணை
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் புதூர் கிராமம் அருகே வைக்கோல் ஏற்றி கொண்டு வந்து லாரி மேலே சென்ற மின் ஓயர் மீது உரசியது. இதனால் வைக்கோலில் தீப்பற்றியது.
இந்த தீ மளமளவென லாரியின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. தீ விபத்தில் சுமார் 7 லட்சம் மதிப்புள்ள லாரி முற்றிலும் எரிந்து சாம்பலானது.
தீ விபத்து குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.