தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு
- 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும்
- 182 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுகிறது
செய்யாறு:
செய்யாறு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு விழா நடந்தது. நிலைய மருத்துவர் (பொறுப்பு) தெ.ரத்தினவேல் தலைமை தாங்கினார். உதவி மருத்துவர் யஷ்வந்த்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் செய்யாறு மூத்த குழந்தை நல மருத்துவர் செந்தில் குமார் கலந்துகொண்டு பேசுகையில்:-
குழந்தை பிறந்த உடனே தொப்புள் கொடி அறுக்கும் முன்பு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுப்பதால் நச்சுக்கொடி விரைவில் பிரியும், கருப்பை சுருங்க ஆரம்பிக்கும். மேலும் சுகப்பிரசவம் என்றால் 2 மணி நேரத்துக்குள், சிசேரியன் என்றால் 4 மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும். தனியார் வேலைக்கு செல்லும் பெண்கள் நலனுக்காக இ.எஸ்.ஐ. மூலமாக 182 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுகிறது என்றார்.
மேலும் தாய்ப்பால் கொடுப்ப தால் தாய்க்கும், சேய்க்கும் ஏற்படும் நன்மைகள் பற்றியும், தாய்ப்பால் கொடுக்கும் முறை, தாய்மார்கள் உண்ணவேண்டிய உணவுகள் பற்றி கூறினார். முடிவில் உதவி மருத்துவர் அனுசுயா நன்றி கூறினார்.