உள்ளூர் செய்திகள்
வாகனம் மோதி கட்டிட மேஸ்திரி பலி
- சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 57). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று திருவண்ணாமல செல்லும் ரோட்டில் படவேடு கூட்ரோடில் சைக்கிளில் சென்றார்.
அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முருகனின் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சந்தவாசல் போலீசில், முருகன் மனைவி வள்ளி (31) புகார் செய்தார். அதன் பேரில் சப் - இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.