உள்ளூர் செய்திகள்

அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

Published On 2023-08-06 12:49 IST   |   Update On 2023-08-06 12:49:00 IST
  • கலெக்டர் முருகேஷ் ஆய்வு
  • பக்கதர்களுக்கு இடையூறு இல்லாமல் பணியாற்ற வேண்டும் உத்தரவு

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியை சுற்றி கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை கலெகட்ர் பா.முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெடுஞ்சாலைத்துறை மூலமாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2021-22ன் கீழ் அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியை சுற்றி சிமெண்ட் சாலை அமைக்கும் பணிபேகோபுரத்தெரு சந்திப்பு முதல் காந்தி சிலை வரையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது.

மேலும் திருவண்ணாமலை தேரடி வீதியில் கான்கீரிட் சிமெண்ட் சாலைகள் அமைப்பதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதனடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, நகராட்சித்துறை ஆகிய 3 துறைகள் மூலமாக பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பணியின் மொத்த அளவு 1080 மீட்டர் அதில் தற்பொழுது 350 மீட்டர் அளவிற்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

மேலும் நகராட்சியின் மூலமாக 12 பாதாள சாக்கடைகள் மற்றும் குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. போலீசார் மூலமாக சாலை போக்குவர த்துகளை உடனுக்குடன் சரி செய்து பொது மக்கள் மற்றும் பக்கதர்களுக்கு இடையூறு இல்லாமல் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை கோட்டப்பொறியாளர் ராஜ்குமார். திருவண்ணாமலை சப்-கலெக்டர் மந்தாகினி, திருவண்ணா மலை நகராட்சி ஆணை யாளர் தட்சணாமூர்த்தி, மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News