உள்ளூர் செய்திகள்
காளியம்மன் கோவிலில் தீ மிதி விழா
- வேடம் அணிந்து கொண்டு கோவிலை சுற்றி வலம் வந்தனர்
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவிலில் ஆடி மாதம் அமாவாசை முன்னிட்டு கூழ்வார்த்தல் மற்றும் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீ காளியம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் காளி வேடம் அணிந்து கொண்டு கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி வினோதமான வழிபாட்டில் ஈடுபட்டனர். கோவில் வளாகத்தில் தீ மிதித்து நேற்று கடன் செலுத்தினர்.
இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ காளியம்மனை தரிசனம் செய்து சென்றனர்.