உள்ளூர் செய்திகள்
சிமெண்டு சாலைகள் அமைப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
- செங்கம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது
- அதிகாரிகள் கலந்து கொண்டனர்
செங்கம்:-
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரண கவுன்சிலர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் விஜயராணிகுமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார்.
இந்த கவுன்சில் கூட்டத்தில் செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மண் ரோடுகள் உள்ள இடங்களில் சிமெண்டு சாலை அமைத்தல் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமார், தனஞ்செயன், பொறியாளர்கள் வினோத்குமார், வினோத்கன்னா, வெற்றி உள்பட பணி மேற்பார்வையாளர்கள், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.