உள்ளூர் செய்திகள்

புதிய எல்.இ.டி. விளக்குகள் பொருத்தும் பணியை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தொடங்கி வைத்த காட்சி.

திருவண்ணாமலையில் ரூ.25 லட்சத்தில் புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி

Published On 2023-10-06 14:24 IST   |   Update On 2023-10-06 14:24:00 IST
  • நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
  • கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு முன்னதாக முடிக்க உத்தரவு

வேங்கிக்கால்:-

திருவண்ணாமலை நகராட்சியில் புதிய எல்இடி விளக்குகள் பொருத்தும் பணியை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 5 ஆயிரத்து 634 மின் கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்ப ங்களில் உள்ள பழைய விளக்குகளை அகற்றிவிட்டு புதிதாக எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது.

எல்.இ.டி. விளக்குகள் பொருத்தும் பணியை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையாளர் ந.தட்சணாமூர்த்தி, சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், நகராட்சி பொறியாளர் நீலேஷ்வர், உதவி பொறியாளர் ரவி, நகரமன்ற உறுப்பினர் கோபிசங்சர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நகராட்சி பகுதியில் உள்ள 39 வார்டுகளிலும் 5 ஆயிரத்து 634 மின்கம்பங்களில் உள்ள டியூப் லைட்டுகள் அகற்றப்பட்டு 9 கோடியே 25 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பிலான புதிய எல்இடி பல்புகள் பொருத்தப்படும். மேலும் 801 இடங்களில் மின்கம்பங்கள் நடப்பட்டு எல்இடி பல்புகள் பொருத்தப்படும்.

இந்த பணிகள் அனைத்தும் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு முன்னர் முடிக்கப்படும் என நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் மற்றும் நகராட்சி ஆணையாளர் ந.தட்சணாமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த புதிய எல்இடி விளக்குகள் அனைத்தும் பொருத்தப்பட்ட பின்பு திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள தெருக்கள் அனைத்தும் இரவிலும் பகல் போன்று காட்சி தரும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News