வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
- 15 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர்
- 1203 பேருக்கு சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் அரசு மேநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் களம்பூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தர் கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்து திட்ட விளக்கவுரை ஆற்றினார்.
சந்தவாசல் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சரவணன் மேற்பார்வையில், சிறப்பு மருத்துவக்குழுவினர், சுகாதார, அங்கன்வாடி மைய பணியாளர்கள் சுமார் 60 பேர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டு, 1203 பேருக்கு சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினர். மேலும் தொடர் சிகிச்சைக்காக 15 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர்.
மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து, தாய்ப்பால் வார உறுதிமொழி ஏற்றனர்.
இதில் சந்தவாசல் ஊராட்சி மன்ற தலைவர் தேசிங்கு, துணை தலைவர் சரஸ்வதிசேகர், ஒன்றிய கவுன்சிலர் அகிலாண்டம்ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.