- 8 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த பெண்கள், ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
அதன்படி இன்று காலை 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ஷேர் ஆட்டோவில் ஆம்பூர் நோக்கி வந்தனர். அப்போது கடாம்பூர் அருகே வந்தபோது, நாய் ஒன்று குறுக்க ஓடியது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர், ஆட்டோவை நிறுத்த முயற்சித்தார்.
அப்போது தரிக்கட்டு ஓடிய ஆட்டோ நிலை தடுமாறி சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பேரணாம்பட்டு கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் மனைவி ஹேமாவதி (வயது 35) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.