இளைஞர்களுக்கு இயற்கை விவசாய இலவச பயிற்சி
- 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
இந்தியன் வங்கி ஊரகசுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் , தமிழக அரசுடன் இணைந்து அனுபவமும் திறமையும் வாய்ந்த வல்லுநர்களை கொண்டு சுயதொழில் தொடங்குவதற்கு இளைஞர்களுக்கு பயிற்சியளித்து வருகிறது . பயிற்சியோடு தொழிலுக்கான வங்கிகள் வழங்கும் சேவைகள் பற்றிய விழிப்பு | யுணர்வு , சந்தை ஆய்வு செய்தல் மற்றும் திட்ட அறிக்கை தயாரித்தல் போன்ற வாழ்வியல் திறன்கள் வழங்கப்படுகிறது .
இத்துடன் காணொலி காட்சி மூலம் செயல்முறை விளக்கங் களும் , இந்தநிறுவனத்தின் மூலமாக பயிற்சி பெற்றவர்களை தொடர்பு கொண்டு அவர்களுடைய தொழில் முறைகளை பற்றியும் , தொழில் அனுபவங்களை பற்றியும் கருத்துக்கள் பகிரப்படுகிறது. பயிற்சியை வெற்றிகரமாகமுடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் .
இத்துடன் தொழில் தொடங்கவழிகாட்டுதல் , ஆலோசனை வழங்குதல் போன்ற இலவச சேவைகளும் வழங்கப்படுகிறது . தற்போது இயற்கை விவசாயம் மற்றும் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி தொடங்கப்பட உள்ளது . பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் வருகிற !! - ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . வயது வரம்பு 18 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும் . திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கிராமப்புற மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள வர்களுக்கு மட்டும் பயிற்சி வழங்கப்படும் . பயிற்சியில் சேர ஆர்வமுள்ளவர்கள் தங்களது பெயர் , முக வரி மற்றும் செல்போன் எண்ணுடன் நேரிலோ அல்லது அஞ்சல் அட்டை மூலம் விண்ணப்பிக்கலாம் .
மேலும் விவ ரங்களுக்கு , இயக்குனர் , இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் , 14 , புதுப்பேட்டை ரோடு , திருப் பத்தூர் என்ற முகவரியில் அணுகலாம் .. இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள் ளார் .