உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பல்லடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை - வட மாநிலத்தை சேர்ந்தவர் போக்சோவில் கைது

Published On 2022-10-07 13:34 IST   |   Update On 2022-10-07 13:34:00 IST
  • மங்கலம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளியின் 12 வயது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று முன்தினம் மங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி சென்றுள்ளார்.
  • சிறுமியை அமர வைத்துவிட்டு, அருகே உள்ள கடைக்குச் சென்று வருவதாக தந்தை சென்றுள்ளார்

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள மங்கலம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளியின் 12 வயது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால், நேற்று முன்தினம் மங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவம னைக்கு தந்தையுடன் சிறுமி சென்றுள்ளார். மருத்து வமனையில் சிறுமியை அமர வைத்துவிட்டு, அருகே உள்ள கடைக்குச் சென்று வருவதாக தந்தை சென்றுள்ளார். சிறிது நேரத்தில் சிறுமி அழுது கொண்டே மருத்துவமனையை விட்டு வெளியே வந்துள்ளார். இதனைப் பார்த்த தந்தை வந்து விசாரித்த போது, மருத்துவமனையில் சிறுமி அருகே உட்கார்ந்து இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி கூறினாள்.

இதையடுத்து அவர் மருத்துவமனைக்குள் சென்று பார்த்தபோது, அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதை அடுத்து சிறுமியின் தந்தை பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், மேற்கண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மதன் பிரசாத் மகன் மகேஷ் பிரசாத், (44) என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News