உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்.

தென்னீரா பானம் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை

Published On 2022-08-29 06:09 GMT   |   Update On 2022-08-29 06:09 GMT
  • பல்லடத்தில் உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.
  • தொழில்துறையினர், விவசாயிகள் பங்குதாரர்களாக உள்ளனர்.

திருப்பூர் :

தென்னை விவசாயிகள் வளர்ச்சி பெறவும், மக்களுக்கு ஆரோக்கியமான பானத்தை வழங்கவும் பல்லடத்தில் உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் ஏராளமான தொழில்துறையினர், விவசாயிகள் பங்குதாரர்களாக உள்ளனர். தென்னையில் இருந்து தயாரிக்கப்படும் நீரா பானத்துக்கு தென்னீரா பெயரிட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:- சென்னை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விற்பனையை அதிகரிக்க செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை செய்து வருகிறோம்.இதற்கான முயற்சியாக. சென்னை, கோவையில் நடக்கும் பொருட்காட்சி, கண்காட்சி ஆகியவற்றிலும் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தினசரி 5 ஆயிரம் பேக்குகள் விற்பனையாகி வருகின்றன. தமிழகத்தில், 50 ஆயிரம் பேக்குகள் தினசரி விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயலாற்றி வருகிறோம். எதிர்வரும் நாட்களில் தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் தென்னீரா விற்பனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Tags:    

Similar News