உலக கோப்பை கிரிக்கெட், கோகோவில் சாதித்தவர்களுக்கு ரூ. 25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர்
- ரூ.25 லட்சத்துக்கான காசோலையை பரிசுத்தொகையாக இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி வாழ்த்தினார்கள்.
- இந்திய அணி சாம்பியன் கோப்பையை பெறுவதற்கு தன் ஆற்றலால் பெரும் பங்களிப்பைச் செய்த தம்பி சுப்பிரமணிக்கு என் அன்பும், வாழ்த்தும் என்று கூறியுள்ளார்.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மலேசியாவில் நடைபெற்ற மகளிருக்கான #T20WorldCup-ல் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல, முக்கிய பங்காற்றிய தங்கை தமிழ்நாட்டைச் சேர்ந்த கமாலினிக்கு முதலமைச்சர், நம் திராவிட மாடல் அரசு சார்பில் ரூ.25 லட்சத்துக்கான காசோலையை பரிசுத்தொகையாக இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி வாழ்த்தினார்கள். தங்கை கமாலினியின் சாதனையில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது. அவர் இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்தி மகிழ்கிறோம்.
இதேப்போன்று, புது தில்லியில் அண்மையில் நடைபெற்ற முதல் கோ-கோ உலக கோப்பை போட்டியில், ஆடவர் பிரிவில், கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பி வி.சுப்பிரமணிக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கி வாழ்த்தினார்கள்.
இந்திய அணி சாம்பியன் கோப்பையை பெறுவதற்கு தன் ஆற்றலால் பெரும் பங்களிப்பைச் செய்த தம்பி சுப்பிரமணிக்கு என் அன்பும், வாழ்த்தும் என்று கூறியுள்ளார்.