2026 தேர்தல் : விஜய் - பிரசாந்த் கிஷோர் இடையே ஒப்பந்தம்
- விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா இணைந்து தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக உள்ளார்.
- விஜய்- பிரசாந்த் கிஷோ சந்திப்புக்கு ஆதவ் அர்ஜூனா ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்.
தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜய், 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கடந்த வருடம் புதுக்கட்சியை தொடங்கினார். தற்போது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
மாவட்ட செயலாளர்களை நியமித்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா விஜயை சந்தித்து, த.வெ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். த.வெ.க.-வில் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமிக்கப்பட்டுள்ளார். சி.டி.ஆர். நிர்மல் குமார் என்பரும் விஜய் கட்சியில் இணைந்துள்ளார். இவர் ஐ.டி. பிரிவில் தலைசிறந்தவர்.
ஆதவ் அர்ஜூனா ஏற்கனவே தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனால் த.வெ.க. கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் பிரபலமான தேர்தல் வியூகம் வகுப்பாளரான பிராசாந்த கிஷோர்- விஜய் சந்திப்புக்கு ஆதவ் அர்ஜூனா ஏற்பாடு செய்தாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் இன்று பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் விஜயை பிரசாந்த கிஷோர் சந்தித்து பேசினார்.
அப்போது 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்க பிரசாந்த் கிஷோர் உடன் விஜய் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.