கோப்புபடம்.
அனைத்து திட்டப்பலன்களும் இணையவழியில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கே வழங்கப்படும் - கலெக்டர் அறிவிப்பு
- விவசாயிகளுக்கு வழங்கப்படும், அனைத்து திட்டங்களையும் செயல்படுத்ததுறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- அனைத்து பயன்களையும் பெற விவசாயிகள் இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும்.
திருப்பூர் :
தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை மூலம் வழங்கப்படும் அனைத்து திட்டப் பலன்களும் இணைய வழியில் பதிவு செய்யும்விவசாயிகளுக்கே வழங்கப்படும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தோட்டக்கலைத்துறை மூலம், விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டங்களில் விவசாயிகளுக்கு மானியங்களும் வழங்கப்படுகின்றன. தற்போதைய, 2022-23ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும், அனைத்து திட்டங்களையும் செயல்படுத்ததுறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து பயன்களையும் பெற விவசாயிகள் இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும்.
தற்போது, விவசாயிகள் இச்சேவையை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இணையதளம் மூலம்விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே, அனைத்து பலன்களும் வழங்க இயலும் நிலை உள்ளதால்இதற்காக விவசாயிகள் ,http:/tnhorticulture.tngov.in/tnhortnet/registration-new.phpஇணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யத்தெரியாத, இயலாத விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள, தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். என கலெக்டர் தெரிவித்துள்ளார்.