உள்ளூர் செய்திகள்

 நடிகர் சிவக்குமார் பேசியபோது எடுத்தப் படம்.

இரண்டாவது தாயாக என்னை பேணிக்காக்கும் என் மனைவியின் மடியிலேயே உயிர் பிரிய வேண்டும் - நடிகர் சிவக்குமார் உருக்கம்

Published On 2023-09-19 15:34 IST   |   Update On 2023-09-19 15:34:00 IST
  • திருக்குறளின்படி வாழ்ந்தவர்கள் வரலாறு குறித்து திரைப்பட நடிகர் சிவக்குமார் பேசினார்.
  • எனது உயிர் எனது மனைவி லட்சுமி மடியில் தான் பிரிய வேண்டும்.

பல்லடம்:

நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள் 100 என்கிற நிகழ்ச்சி பல்லடம் வனாலயத்தில் நடைபெற்றது.

இதில் திருக்குறளின்படி வாழ்ந்தவர்கள் வரலாறு குறித்து திரைப்பட நடிகர் சிவக்குமார் பேசினார். அப்போது அவர் வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு என்ற குறளில் தொடங்கி 100-வது கதையாக மலக்குழி இறங்கும் துப்புரவுத் தொழிலாளியின் கதையைக் கூறி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அதற்குரிய குறளைக் கூறி நிறைவு செய்தார்.

இந்த திருக்குறள் கதைகளில் எம்.ஜி.ஆர், சத்யராஜ், சூர்யா மற்றும் சிவக்குமாரின் தாயார் மற்றும் மனைவி ஆகியோரது வாழ்வியல் சம்பவங்களை திருக்குறளுடன் குறிப்பிட்டு பேசினார்.

மனைவி பற்றி பேசும்போது, எனது உயிர் எனது மனைவி லட்சுமி மடியில் தான் பிரிய வேண்டும். என் தாயார் இறந்த பின்பு இரண்டாவது தாயாக என்னை பேணிக்காக்கும் அவளது மடியில் தான் எனது உயிர் போக வேண்டும் என்று உள்ளம் உருக பேசினார்.

Tags:    

Similar News