உள்ளூர் செய்திகள்
வெள்ளக்கோவிலில் பனியன் நிறுவன பெண் தொழிலாளி தற்கொலை
- வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உப்புபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வந்தார்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில், சீரங்கராயகவுண்டன் வலசு ரோடு, பாண்டி நகர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 47). இவரது மனைவி பேச்சியம்மாள் (42) . இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பேச்சியம்மாள் வெள்ளகோவில் அருகே உள்ள உப்புபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வந்தார். பேச்சியம்மாள் மன சங்கடத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று பேச்சியம்மாள் மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதையடுத்து தண்டபாணி பேச்சியம்மாளை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர்கள் பரிசோதித்த போது பேச்சியம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.