நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.
நாம் தமிழர் கட்சி சார்பில் கொடியேற்று விழா
- மடத்துக்குளம் பகுதி மூத்த தமிழ்தேசியவாதியான கதிர்வேல் புலிக்கொடியை ஏற்றி வைத்தார்.
- அதைத்தொடர்ந்து மாத கலந்தாய்வு கிருஷ்ணாபுரம் பகுதியில் நடைபெற்றது.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும், முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை யும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட பொருளாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். மடத்துக்குளம் பகுதி மூத்த தமிழ்தேசியவாதியான கதிர்வேல் புலிக்கொடியை ஏற்றி வைத்தார்.
அதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சீதாலட்சுமி, தலைவர் ஈசுவரசாமி, பொருளாளர் ராமமூர்த்தி, இணை செயலாளர் நாகமாணிக்கம், துணை தலைவர் விஜயகுமார், மகளிர் பாசறை செயலாளர் ரீத்தாமேரி, மடத்துக்குளம் ஒன்றிய பொருப்பாளர்கள் தியாகராஜன் மற்றும் சிவநாதன், மடத்துக்குளம் பேரூராட்சி பொருப்பாளர்கள் பாலசுப்ரமணியம், வடிவேல் மற்றும் ரப்ரீக் ராசா, சங்கராமநல்லூர் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி, செய்தி தொடர்பாளர் சிலம்பரசன், தளி பேரூராட்சி செயலாளர் சரவணக்குமார், பொருளாளர் சுரேஷ், துணை தலைவர் சிவக்குமார் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து மாத கலந்தாய்வு கிருஷ்ணாபுரம் பகுதியில் நடைபெற்றது.