உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் கடையின் வெளியே நிறுத்தப்பட்டிருந்தமோட்டார் சைக்கிள் திருட்டு - சி.சி.டி.வி. காட்சி மூலம் மர்மநபருக்கு வலைவீச்சு
- வழக்கு பதிவு செய்த தெற்கு போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி .கேமராவை ஆய்வு செய்தனர்.
- அவரும் அவரது நண்பரும் அவர்களது இருசக்கர வாகனங்களை உணவகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் உணவகத்திற்கு டீ அருந்த சென்றுள்ளார். அவரும் அவரது நண்பரும் அவர்களது இருசக்கர வாகனங்களை உணவகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியப்பன் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தெற்கு போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி .கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது கடையிலிருந்து வெளியே வந்த மர்ம நபர் ஒருவர் வேறு ஒரு சாவியை போட்டு மாரியப்பனின் இருசக்கர வாகனத்தை அவசர அவசரமாக எடுத்துக் கொண்டு ஒரு வழிப்பாதையில் சென்றது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.