உள்ளூர் செய்திகள்
அவினாசியில் வேன் மோதி வாலிபர் பலி
- அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சிகிச்சை பலனின்றி விஷ்ணு பரிதாபமாக உயிரிழந்தார்.
அவினாசி:
அவினாசியை அடுத்துள்ள குரும்பபாளையத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மகன் விஷ்ணு (வயது20).இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார் . நேற்று மாலை அவினாசியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு செல்லும் ரோட்டோரம் நின்றிருந்த வேன்மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஷ்ணு பலத்த காயமடைந்தார் .காயமடைந்த விஷ்ணுவை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஷ்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.