உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் குடும்ப நல ஆலோசனை மையம் திறப்பு

Published On 2022-09-29 09:40 IST   |   Update On 2022-09-29 09:40:00 IST
  • முதன்மை சார்பு நீதிபதி செல்லத்துரை நன்றி கூறினார்.
  • அரசு வக்கீல்கள் கனகசபை, பூமதி, தமயந்தி, மனோகரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் குடும்ப நல கோர்ட்டில் குடும்பநல ஆலோசனை மையம் திறக்கப்பட்டது. முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். குடும்ப நல கோர்ட்டு நீதிபதி சுகந்தி வரவேற்றார். அரசு மனநல டாக்டர் சஞ்சய் போஸ், மனிதர்களுடைய உளவியல் குறித்தும் அதை கவனமாக கையாள வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி பேசினார்.

முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் பேசும்போது, 'மனிதர்களிடையே உளவியல் என்பது உணர்வோடு தொடர்புடையது. குடும்ப நல கோர்ட்டு மற்ற கோர்ட்டுகளில் இருந்து வேறுபட்டது. இரண்டு மனிதர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் பிரச்சினைகளை உணர்வு பூர்வமாகவும், அதே நேரத்தில் நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு அறிவு பூர்வமாகவும் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதன் தொடர்ச்சியாக குடும்பநல ஆலோசனை மையம் மனிதர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இருதரப்பினர் சமரசத்துடன் செல்வதற்காக அல்லது அவர்களின் பிரச்சினைகளை நீதிமன்றம் மூலமாக தீர்வு காண மேற்கொள்ளப்படும்' என்றார்.

முதன்மை சார்பு நீதிபதி செல்லத்துரை நன்றி கூறினார். இந்த ஆலோசனை மையத்துக்கு 3 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குடும்ப நல ஆலோசனைகள் இலவசமாக பெற முடியும். இந்த நிகழ்ச்சியில் அமர்வு நீதிபதிகள் நாகராஜன், பத்மா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, கூடுதல் சார்பு நீதிபதி மேகலா மைதிலி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆதியான், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் பாரதிபிரபா, ரஞ்சித்குமார், பழனிக்குமார், முருகேசன், கார்த்திகேயன், வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர்கள் பழனிசாமி, ராஜேந்திரன், அரசு வக்கீல்கள் கனகசபை, பூமதி, தமயந்தி, மனோகரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். 

Tags:    

Similar News