உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்

Published On 2023-04-03 16:03 IST   |   Update On 2023-04-03 16:03:00 IST
திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:45 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

திருப்பூர்,ஏப்.3-

மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் வழியாக சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ெரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவனந்தபுரம்- சென்னை எழும்பூர் ெரயில்(வண்டி எண்: 06044) வருகிற 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரு தினங்கள், திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:45 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர்- திருவனந்தபுரம் ெரயில் (வண்டி எண்: 06043) வருகிற 6 மற்றும் 13 ஆகிய இரு தினங்கள் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மதியம் 2:25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:45 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை சென்றடையும்.இந்த ெரயிலானது அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

எர்ணாகுளம்- சென்னை எழும்பூர் ெரயில் (வண்டி எண்: 06046) வருகிற 9 மற்றும் 16-ந் தேதி, எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இரவு 11:20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:05 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர்- எர்ணாகுளம் ெரயில் (வண்டி எண்: 06045) வருகிற 10 மற்றும் 17ந்தேதி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2:25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3:10 மணிக்கு எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த ெரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News