உள்ளூர் செய்திகள்
வெள்ளகோவிலில் கட்டிட கலைஞர் நலச்சங்கம் சார்பில் பேரணி
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கட்டிட கலைஞர் நலச்சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது,
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் மே தினத்தையொட்டி கட்டிட கலைஞர் நல சங்கத்தின் சார்பில் 2 ம் ஆண்டாக பேரணி, சங்க கொடி ஏற்றுதல், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தலைவர் எஸ். கண்ணன் தலைமையில், சட்ட ஆலோசகர் வி.கந்தசரவணகுமார் முன்னிலையில் நடந்தது.
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெள்ளகோவில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பேரணியாக தொடங்கி சிவநாதபுரம் வழியாக கோவை ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்திற்கு வந்தனர். திருவள்ளுவர் நகர், சிவநாதபுரம், கோவை ரோட்டில் உள்ள சங்க அலுவலகம் முன்பு கட்டிடக்கலைஞர்கள் நல சங்க கொடி ஏற்றப்பட்டது. சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சர் பிட்டி தியாகராயர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் கே.ஜி. நட்ராஜ் மற்றும் கட்டிடக்கலைஞர்கள் நலச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.