உள்ளூர் செய்திகள்
வெள்ளகோவிலில் விளம்பர பதாகைகள் அகற்றம்
- ஊர் பெயர் பதாகை,வழிகாட்டி பதாகைகளை மறைக்கும் வகையில் தனியார் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
- நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விளம்பர பதாகைகளை அப்புறப்படுத்தினர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் திருச்சி -கோவை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.இந்தநிலையில் வெள்ளகோவில் அருகே உள்ள ஒத்தக்கடை என்ற இடத்தில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த ஊர் பெயர் பதாகை,வழிகாட்டி பதாகைகளை மறைக்கும் வகையில் தனியார் கல்வி நிறுவனங்களின் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
தகவலறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த கல்வி நிறுவன விளம்பர பதாகைகளை அப்புறப்படுத்தினர். இச்செயலை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளை பாராட்டினர்.