உள்ளூர் செய்திகள்

திறப்பு விழாவில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம். 

திருப்பூரில் எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ்-கேக்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை தொடக்க விழா - முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

Published On 2022-09-02 17:17 IST   |   Update On 2022-09-02 17:17:00 IST
  • திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே பல்லடம் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • எப்.ஐ.இ.ஓ. தலைவர் சக்திவேல் கலந்து கொண்டு, புதிய கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

திருப்பூர் :

ஈரோடு மாநகரை தலைமையிடமாக கொண்டு எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ் அண்ட் கேக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளைகள் ஈரோடு, பெருந்துறை, கோபி, நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபளையம், கரூர் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ் அண்ட் கேக் விற்பனையகத்தின் புதிய கிளையாக திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே பல்லடம் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் துவக்க விழா நடந்தது. விழாவுக்கு எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ்-கேக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ஆர். மகுடீஸ்வரன் தலைமை தாங்கினார். திருப்பூர் கிளையின் இயக்குனர்கள் சுடர்வண்ணன், பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக எப்.ஐ.இ.ஓ. தலைவர் சக்திவேல் கலந்து கொண்டு, புதிய கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஸ்டார் டைம் அப்பேரல்ஸ் நிறுவன உரிமையாளரான ஈஸ்வரமூர்த்தி-மகேஸ்வரி, சிவக்குமார்-சாந்தி, தாரணி, சுரசிந்து ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். முதல் விற்பனையை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் துவக்கி வைக்க, அதனை சிவா புளுமெட்டல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆதியூர் மணி என்ற இளங்கோ பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ் அன்ட் கேக்ஸ் நிறுவனத்தின் வினோத்சிங்காரம், கோவிந்தராஜ், மோகன், மாஸ்டர் மதனகோபால், திருநகர் காலனி சிவக்குமார், சதீஷ், ஈரோடு இதயம் நற்பணி இயக்க தலைவர் மகாதேவன் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News