உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பராமரிப்பு இல்லாததால் கருகும் ஆயிரக்கணக்கான மரங்கள்

Published On 2022-07-27 13:51 IST   |   Update On 2022-07-27 13:51:00 IST
  • பசுமைப்பரப்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்களின் கீழ் மரக்கன்றுகள் நடப்படுகிறது.
  • மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியை கூட ஊராட்சி நிர்வாகத்தினர் தவிர்த்து விடுகின்றனர்.

குடிமங்கலம் :

குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. அங்குள்ள கிராமங்களில் பசுமைப்பரப்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்களின் கீழ் மரக்கன்றுகள் நடப்படுகிறது.குறிப்பாக தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடவு, பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.மேலும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்தாண்டு நீர்நிலை கரைகளில் பனை விதை நடவு செய்ய வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

இவ்வாறு பல்வேறு திட்டங்களின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டாலும் தொடர் பராமரிப்பில், அக்கறை காட்டுவதில்லை.வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யாத போது மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியை கூட ஊராட்சி நிர்வாகத்தினர் தவிர்த்து விடுகின்றனர். இதனால் மரக்கன்றுகள் குறுகிய காலத்தில் தண்ணீரின்றி கருகி விடுகிறது.இவ்வாறு, ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் கிராமங்களில் கருகும் அவல நிலையில் காணப்படுகிறது.

சில கிராமங்களில் மட்டும் மரக்கன்றுகளை பாதுகாக்க பசுமை வலை அமைத்து தன்னார்வலர்கள் உதவியுடன், தண்ணீர் ஊற்றி பராமரிக்கின்றனர்.இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், மரம் வளர்ப்புக்கு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதில்லை. இதனால் திட்டத்தின் நோக்கமும், ஒதுக்கப்படும் நிதியும் வீணாகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News