உள்ளூர் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி நாளில் தடையில்லா மின்சாரம்
- தடையில்லா மின் சப்ளை வழங்க மின்வாரியம் தயாராகி வருகிறது.
- மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்கென காலை, முதல் மாலை வரை மின்தடை செய்யப்படுவது வழக்கம்.
திருப்பூர் :
நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.இதையொட்டி இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோவில்கள், பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைசெய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்படும். அடுத்த ஓரிரு நாட்களில், சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, விசர்ஜனம் செய்யப்படும்.இந்நாட்களில் தடையில்லா மின் சப்ளை வழங்க மின்வாரியம் தயாராகி வருகிறது.
மின்வாரிய உட்கோட்டம் சார்ந்த துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்கென காலை, முதல் மாலை வரை மின்தடை செய்யப்படுவது வழக்கம்.விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்தடை செய்யப்படும் நாளாக இருந்தால் அது வேறு தேதிக்கு மாற்றப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்தனர்.