குருவாயூரில் இருந்து உடுமலை வழியாக ராமேஸ்வரத்துக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை
- தென் மாநிலத்தில் உள்ள பக்தர்களும், பிற நாடுகளில் இருந்தும் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
- குருவாயூர் - ராமேஸ்வரத்திற்கு 496 கி.மீ தூரத்தில் நேரடியாக வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும்.
உடுமலை
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி ெரயில்வே நிலையத்தை பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை , உடுமலை ஆகிய தாலுகா மக்கள் பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில் குருவாயூர் - ராமேஸ்வரத்துக்கு வந்தே பாரத் ெரயில் இயக்க வேண்டுமென பொள்ளாச்சி ெரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், தெற்கு ெரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பினர். மனுவுடன் எந்த வழித்தடத்தில் ெரயில் இயக்க வேண்டுமென வரைபடத்தையும் சேர்த்து அனுப்பியுள்ளனர்.
இது குறித்து பொள்ளாச்சி ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:-
குருவாயூரில், ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலும், பாலக்காட்டில் சைலண்ட் வேலி, நெல்லியம்பதி மலை, மலம்புழா அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.ராமேஸ்வரத்தில், ராமநாத சுவாமி கோவில், ராமநாதபுரத்தில் ஏர்வாடி தர்கா போன்ற முக்கிய புனித தலங்கள் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழநியில் முருகன் கோவில் உள்ளது.
தென் மாநிலத்தில் உள்ள பக்தர்களும், பிற நாடுகளில் இருந்தும் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். பழநி அருகே புகழ் பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலும் உள்ளது.பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலும், வால்பாறை மலை, ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆழியாறு போன்ற சுற்றுலா தலங்களும் உள்ளன. உடுமலை அருகே, திருமூர்த்தி மலை கோவிலும்,மூணாறு, அமராவதி போன்ற வனப்பகுதிகளும் உள்ளன.
ஆனால் பொள்ளாச்சி - உடுமலை - பழநி - ஒட்டன்சத்திரம் - மதுரை - ராமநாதபுரம் - ராமேஸ்வரத்துக்கு நேரடி ெரயில் வசதியில்லை. இதனால், பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
எனவே, குருவாயூர் - ராமேஸ்வரம் இடையே குறைந்த தொலைவாக உள்ள, 496 கி.மீ., தூரத்துக்கு நேரடியாக வந்தே பாரத் ெரயில் இயக்க வேண்டும்.இந்த ெரயில், திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழநி, மதுரை வழியாக இயக்கப்பட வேண்டும். இதன் வாயிலாக, கேரளா மாநிலத்தின், பொன்னானி, திருச்சூர், பாலக்காடு, ஆலத்தூர் உள்ளிட்ட 4 பாராளுமன்ற தொகுதிகளும், தமிழகத்தின்,பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 பாராளுமன்ற தொகுதி மக்களும் பயன் பெற முடியும்.எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, ெரயில் இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தி மனு அனுப்பியுள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.