ஊழல் தடுப்பு, லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு
- புகார் எப்படி அளிக்க வேண்டும் என மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது
- பதக்கங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் பள்ளியில் திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பாக காவல் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் இன்ஸ் பெக்டர் பிரபு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பற்றியும், புகார் எப்படி அளிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் திருவண்ணாமலை வட்ட அளவிலான தடகள போட்டி மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 7 தங்க பதக்கங்களையும், 15 வெள்ளிப் பதக்கங்களும் மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பாக காவல் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் இன்ஸ் பெக்டர் பிரபு மாணவர்களுக்கு பதக்கங்களையும் வாழ்த்துளை தெரிவித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும் இதற்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள். எ. ஹரிபிராசாத், வி.பிரகாஷ் பள்ளியின் செயலாளர் டாக்டர்.வி.எம். நேரு, தலைவர் டாக்டர். கணேசன், பொருளாளர் மணி, இணைச் செயலாளர் ரவிச்சந்திரன், சிஷ்யா பள்ளி முதல்வர் டாக்டர் மகாதேவன் மற்றும் அறக்கட்டளை இயக்குநர்கள் அனைவரும் பாராட்டினர்.