உள்ளூர் செய்திகள்

கருப்பு பட்டை அணிந்து நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-04-18 14:51 IST   |   Update On 2023-04-18 14:51:00 IST
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
  • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே நில அளவை அலுவர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் ஏழுமலை, திருவண் ணாமலை கோட்ட கிளை தலை வர் தரணிவாசன், ஆரணி கோட்டை கிளை தலைவர் அசோக்குமார், செய்யாறு கோட்ட கிளை தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் வாசுதேவன் வரவேற்றார். மாநில தலைவர் ராஜா கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.

இதில் நில அளவை கள அலுவ லர்களின் பணிச்சுமையை கருத்தில் கொள்ளாமல் நில அளவர் முதல் உயர்நிலை அலுவலர்கள் வரை உள்ளவர்கள் மீது நடவ டிக்கை எடுத்து வரும் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குன ரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும், நவீன நில அளவை உடனடியாக வழங்கிட கோரியும், ஒப்பந்த சர்வேயருக்கு அரசு வேலை வழங்கிட கோரியும், காலி பணியிடங்களை நிரப்பக் கோரி யும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சையத்ஜலால், தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்திபன், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் அண்ணா துரை, நெடுஞ்சாலை பணியா ளர் சங்க மாநில செயலாளர் மகாதேவன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சந்துரு உள்பட நில அளவை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கன்னி வேல் நன்றி கூறினார்.

Tags:    

Similar News