உள்ளூர் செய்திகள்

துரியோதனன் படுகளம், தீமிதி திருவிழா

Published On 2023-05-09 12:56 IST   |   Update On 2023-05-09 12:56:00 IST
  • வருகிற 12-ந்தேதி நடக்கிறது
  • அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள 5 புத்தூரில் தர்மராஜா கோவிலில் மகாபாரத அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது.

இதைமுன்னிட்டு கடந்த 7-ந் தேதி காலை அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு தபசு மரம் அமைத்து அர்ச்சுனன் வேடமணிந்த நாடக நடிகர் மரத்தின் உச்சியில் ஏறிச் சென்று ஈசனிடம் பாசு பதாஸ்திரம் வேண்டினார்.

நிகழ்ச்சியில் தபசு மரத்தை சுற்றி குழந்தை வரம் வேண்டியும் திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு திருமணம் வேண்டியும் வணங்கினர். தபசு மரத்தில் இருந்த கீழே தனது கையிலிருந்த பிரசாதங்கள் பக்தர்கள் வீசினார்.

வருகிற 12-ந்தேதி காலை துரியோதனன் படுகளம், மாலையில் தீமிதி விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News