உள்ளூர் செய்திகள்
- விழுப்புரம் ஆசிரமத்தில் ஒப்படைத்தனர்
- பொதுமக்களை அடிப்பதாக புகார்
வந்தவாசி:
வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி வருவதாகவும் அப்பெண் பொதுமக்களை தகாத வார்த்தைகள் பேசியும், அடிக்கவும் செய்துள்ளார் என அப்பகுதி பொதுமக்கள் மூலம் வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
பிறகு போலீசார் உடனே மீட்பு பணிகள் செய்து வரும் அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து நேரடியாக சென்று பார்வையிட்ட அறக்கட்டளையின் நிறுவனர் அசாருதீன் மற்றும் கேஷவராஜ் பெண்ணின் அவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோளை ஏற்று விழுப்புரம் அருகில் உள்ள ஆசிரமத்தில் ஒப்படைத்தனர்.