உள்ளூர் செய்திகள்

சுருளி பகுதியில் இயக்கப்படும் வனத்துறை வாகனம்.

நீர்வரத்து சீரானதால் 20 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி சுருளியில் பக்தர்கள் வசதிக்காக வாகனம் இயக்கம்

Published On 2022-11-23 06:33 GMT   |   Update On 2022-11-23 06:33 GMT
  • இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் சுருளி அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
  • கேட்டில் இருந்து அருவி வரை வாகனம் இயக்கப்படுகிறது. இதற்காக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சேவையால் முதியவர்கள் சிரமமின்றி சென்று வருகின்றனர்.

கூடலூர்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடை க்கானலில் பெய்யும் மழை இங்கு அருவியாக கொட்டு கிறது.

இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

மேலும் தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ள நிலையில் அய்யப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 3ந் தேதி சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

தற்போது மழை ஓய்ந்து சீரான நீர்வரத்து உள்ளதால் 20 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் அய்யப்ப பக்த ர்கள் உள்பட ஏராள மானோர் அருவியில் உற்சாகமாக குளித்து சென்ற னர்.

இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்று அமாவாசை என்பதால் பக்தர்கள் சுருளியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

அய்யப்ப பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுருளி அருவியில் வாகனங்கள் நுழைவு வாயில் பகுதியில் நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து அருவிக்கு சுற்றுலா பயணிகள் நடந்து செல்கின்றனர். அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்ல சிரமப்படு வார்கள் என்பதால் வனத்து றை சார்பில் வாகனங்கள் இயக்கப்படுகிறது.

கேட்டில் இருந்து அருவி வரை வாகனம் இயக்கப்படுகிறது. இதற்காக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சேவையால் முதியவர்கள் சிரமமின்றி சென்று வருகின்றனர்.

Tags:    

Similar News