உள்ளூர் செய்திகள்
பேத்துப்பாறையில் மரக்கன்றுகள் நடும் விழா
- பேத்துப்பாறையில் பல்வேறு வகையிலான மர கன்றுகள் நடப்பட்டது.
- நிகழ்ச்சியில் வனத்துறையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை வயல் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் காந்தி கிராம பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு அப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சோலை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான மர கன்றுகள் அப்பகுதியில் நடப்பட்டது.
மேலும் அப்பகுதியில் மரக்கன்றுகள் நடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வனத்துறையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.