உள்ளூர் செய்திகள்

அடுத்தடுத்து 3 பஸ்கள் மோதல்

Published On 2023-09-25 09:40 GMT   |   Update On 2023-09-25 09:40 GMT
  • திருச்சி மேலப்புதூர் அருகே அடுத்தடுத்து 3 பஸ்கள் மோதல்
  • திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பஸ்களையும் பறிமுதல் செய்து விசாரணை

திருச்சி, 

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை சுமார் 7.25 மணி அளவில் தனியார் பஸ்கள் சத்திரம் பஸ் நிலையம் நோக்கி புறப்பட்டு சென்றது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். திருச்சி மேலப்புதூர்அருகில் உள்ள ஜோசப் கண் மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் ஒரு தனியார் பஸ் நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த தனியார் டவுன் பஸ் அந்த பஸ்சின் மீது மோதியது. அந்த சமயத்தில் அதற்கு பின்னால் வந்த மற்றொரு தனியார் பஸ் இரண்டாவதாக உள்ள பஸ் மீது மோதியது .இதில் அடுத்தடுத்து பஸ்கள் மோதியதில் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர் .இது குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பஸ்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News