உள்ளூர் செய்திகள் (District)

வீரப்பூர் கோவில் மாசிப்பெருந்திருவிழாவில் இன்று பெரியகாண்டியம்மன் பெரிய தேர்பவனி

Published On 2023-02-28 09:03 GMT   |   Update On 2023-02-28 09:03 GMT
  • வீரப்பூர் கோவில் மாசிப்பெருந்திருவிழாவில் இன்று பெரியகாண்டியம்மன் பெரிய தேர்பவனி நடந்தது
  • ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்தனர்

மணப்பாறை:

திருச்சி மாவட்டம், மணப் பாறையை அடுத்த வீரப்பூரில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த கன்னிமாரம்மன் கோவில்களின் மாசிப்பெருந் திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சி–களில் ஒன்றான பெரிய–காண்டியம்மன் பெரிய தேர்பவனி இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

வீரப்பூர் ஜமீன்தார்களும், கன்னிமாரம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர்க–ளு–மான மீனா ராம–கிருஷ் ணன், தரனீஷ், ஆர்.பொன் னழகேசன், சௌந்தர–பாண்டியன் ஆகி–யோர் தலைமை தாங்கினர்.

இதில் பட்டியூர் கிராமங்க–ளின் ஊர் முக்கியஸ்தர்கள், கன்னிமாரம்மன் கோவில் களின் பரம்பரை பூசாரிக–ளான பெரியபூசாரி செல் வம், குதிரை பூசாரி மாரி–யப்பன், சின்ன பூசாரி கிட்டு என்ற கிருஷ்ணசாமி, வேட்டை பூசாரி வீரமலை, கோவில் பரம்பரை அர்ச்ச–கர் ரெங்கசாமி அய்யர் ஆகி–யோர் அம்னுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

அதன் பின்னர் அலங்க–ரிக்கப்பட்ட பெரிய–காண்டி–யம்மன் கோவில் முன்பு நிலையில் அலங்க–ரித்து நிறுத்தி வைக்கப்பட்டி–ருருந்த தேரில் எழுந்த–ருளினார். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிற்கு பின்னர் சாம்புவன் காளை முரசு கொட்டி முன் செல்ல தேர் புறப்பட்டது.

போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது திரண்ட பக்தர் கள் தங்கள் விவசாய நிலங்க–ளில் விளைந்த தானியங்க–ளையும், மலர்களையம், மலர் மாலைகளையும் தேரோடும் வீதியின் இருபுறமும் நின்று தேர் மீது போட்டு வணங்கி–னர். நிலையில் இருந்து புறப்பட்ட தேர் கோவிலை சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது.

முன்னதாக நேற்று மாலை வீரப்பூரில் பொன்னர் குதிரை வாகனத்தில் அணி–யாப்பூர் குதிரை கோவி–லுக்கு சென்று அம்பு போடும் வரலாற்று நிகழ்ச்சி–யான வேடபரி திருவிழா நடைபெற்றது. பெரிய–காண்டியம்மன் கோவிலில் இருந்து அலங்கரிப்பட்ட குதிரை வாகனத்தில் பொன்னர் அமர்ந்து குதிரை பூசாரி மாரியப்பன் குடை–பிடித்தபடி குதிரை வாக–னத்தில் நின்றவாறு வந்தார்.

அந்த வாகனத்தை பட்டியூர் கிராமங்களின் ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் இளைஞர்கள் கூட்டம் சுமந்து வந்தனர். அலங்கரிக்கப்பட்ட யானை வாகனத்தில் பெரியகாண்டியம்மனை பெரிய பூசாரி செல்வம் யானை வாகனத்தில் நின்று வர அதனை பட்டியூர் கொடிக்கால்காரர்கள் வகை ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் இளைஞர்கள் சுமந்து சென்றனர்.

வாகனங்களுக்கு முன்பு முரசு கொட்டும் காளை செல்ல, அதைத் தொடர்ந்து கன்னிமாரம்மன் கோவில் களின் பரம்பரை அறங்கா–வலர்களும், வீரப்பூர் ஜமீன்தார்களுமான மீனா ராமகிருஷ்ணன், தரனீஷ், ஆர்.பொன்னழகேசன், சௌந்தரபாண்டியன் ஆகி–யோர் சென்றனர்.

அவர்களை தொடர்ந்து குதிரை, யானை வாகனங் கள் சென்றது. வாக–னங் களை தொடர்ந்து சின்ன–பூசாரி கிட்டு என்ற கிருஷ்ணசாமி, வேட்டை பூசாரி வீரமலை தங்காள் கரகத்துடன் சென்றனர்.

6.10 மணிக்கு வேடபரி புறப்பட்டு அணியாப்பூர் குதிரை கோவில் சென்று இளைப்பாற்றி மண்டபம் திரும்பியது. இன்று அதி–காலை இளைப்பாற்றி மண்டபத்தில் இருந்து வாகனங்களில் தெய்வங் கள் வீரப்பூர் பெரிய–காண்டியம்மன் கோவிலை வந்தடைந்தது. வேடபரி சென்ற வழி நெடுக சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான குடி–பாட்டுக்காரர்களும், பக்தர்களும் நின்று வழி–பட்டனர். நிகழ்ச்சிகளை ஆசிரியர் திருவாசக விடவை வெ.நல்லுசாமி தொகுத்து வழங்கினார்.


Tags:    

Similar News