கதவு திறக்காதது குறித்து விமான நிலைய இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவு
- கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கதவு திறக்காமல் போன விவகாரம்...
- விரைவில் விசாரணை தொடங்க உள்ளது
கே.கே.நகர்,
திருச்சி விமான நிலையத் திலிருந்து பல்வேறு வெளிநா–டுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது.அதில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்குவதற்கு தயாரானார்கள். ஆனால் விமானத்தில் கதவுகள் திறக் கப்படவில்லை. ஊழி–யர்கள் முயற்சி செய்தும் கதவை திறக்க முடியவில்லை. தொழில்நுட்ப கோளாறே இதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.இதற்கிடையே விமானத் திற்குள் சிக்கிக்கொண்ட பயணிகள் பெரும் அவ–திக்கு ஆளானார்கள். பின்னர் உடனடியாக இது பற்றி தொழில்நுட்ப வல்லு–நர்களுக்கு தகவல் தெரி–விக்கப்பட்டது. அவர்கள் வந்து சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு கதவை திறந்தனர். அதன் பிறகே பயணிகள் வெளியே வர முடிந்தது.இந்த விவகாரம் தொடர் பாக விமான நிலைய ஆணையக் குழுவின் சார் பில் விசாரணைக்கு உத்தர–விடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இந்த விமான நிலைய ஆணைய குழுவினர் விசாரணையை தொடங்குவார்கள் என்று தெரிகிறது.