உள்ளூர் செய்திகள்

உணவில் விஷம் வைத்து பெண்ணை கொல்ல முயற்சி?

Published On 2023-11-09 15:15 IST   |   Update On 2023-11-09 15:15:00 IST
  • தருமபுரி அருகே உணவில் விஷம் வைத்து பெண்ணை கொல்ல முயற்சி செய்தவருக்கு போலீசார் வலை வீச்சு
  • கடந்த 30 ஆண்டுகளாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே 30 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை உணவில் விஷம் வைத்து கொல்ல முயன்றதாக வந்த புகாரின் பேரில் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி அருகே உள்ள பூனையானூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணகி (வயது52). கூலி வேலை செய்து வருகின்றார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் இவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் கணவனைப் பிரிந்து தனிமையில் இருந்து வந்த கண்ணகிக்கும், அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் அதே பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு, வாய் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த உணவை கண்ணகி சாப்பிடு வதற்காக தட்டில் போட்டுள்ளார், அப்போது உணவில் இருந்து விஷ வாடை வந்ததால் சந்தேகம் அடைந்த கண்ணகி சாப்பா ட்டுடன் பாப்பி ரெட்டிப்பட்டி போலீஸ் நிலையம் வந்து, தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த மனோகரன் என்னை கொலை செய்வதற்கு உணவில் விஷம் கலந்துள்ளதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் லதாவிடம் புகார் தெரிவித்தார்.

அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். உணவில் விஷம் கலந்தது தொடர்பாக உணவு சோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது. இதனை அறிந்த மனோகரன் தலை மறைவாக உள்ளார். தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணுக்கு உணவில் விஷம் வைத்துக் கொள்ள முயன்ற சம்பவம் அந்த பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News