கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்
- சம்பவத்தன்று கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை.
- கடந்த 29-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ரம்யா திரும்ப வீடு திரும்பவில்லை.
தருமபுரி,
தருமபுரி பகுதியை சேர்ந்தவர் 16 வயது கல்லூரி மாணவி. இவர் நல்லம்பள்ளியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் கடத்தூர் அருகே உள்ள அஸ்தகிரியூர் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவர் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (வயது21). இருவருக்கும் திருமணம் ஆகி 3 வருடம் ஆகிறது.
இந்நிைலயில் கடந்த 29-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ரம்யா திரும்ப வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.