உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

அம்ருத் பாரத் ரெயில் நிலையம் திட்டத்தின் கீழ் பழனி ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை

Published On 2023-07-15 05:22 GMT   |   Update On 2023-07-15 05:22 GMT
  • அம்ருத் பாரத் ரெயில் நிலையம்’ திட்டத்தின் கீழ் பழனி ரெயில் நிலையம் மறுசீரமைப்பு செய்து தரம் உயர்த்தப்பட உள்ளது.
  • மாற்றுத்திறனாளி களுக்கான வசதிகள், ரெயில் நிலையப்பகுதியில் சாலை வசதி, லிப்ட் அல்லது எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

பழனி:

'அம்ருத் பாரத் ரெயில் நிலையம்' திட்டத்தின் கீழ் பழனி ரெயில் நிலையம் மறுசீரமைப்பு செய்து தரம் உயர்த்தப்பட உள்ளது.

நாட்டின் பெரிய, சிறிய நகரங்களில் உள்ள ரெயில் நிலையங்களை மறுசீர மைப்பு செய்து மேம்படுத்த ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 'அம்ருத் பாரத் ரெயில் நிலையம்' திட்டத்தில் மதுரை கோட்டத்தில் விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், பழனி உள்பட 15 ரெயில் நிலை யங்கள் தேர்வு செய்யப்பட்டு ள்ளன.

இந்த ரெயில் நிலையங்களை மறுகட்ட மைப்பு செய்து, பயணி களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த முகல் கட்டமாக ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது. அதன்படி தற்போது பழனி ரெயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய ஒப்பந்தப்புள்ளி கோர ப்பட்டு ள்ளது.

இத்திட்டத்தில் பயணிகள் காத்திருப்போர் அறைகள் மேம்படுத்த ப்படும். ரெயில் வருகை, புறப்பாடு உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்கும் டிஜிட்டல் அறிவிப்பு பலகை, ரெயில் நிலையப் பகுதியில் தோட்டம், அலங்கார முகப்பு, வாகன காப்பக வசதி, நடைமேடை வசதி, மாற்றுத்திறனாளி களுக்கான வசதிகள், ரெயில் நிலையப்பகுதியில் சாலை வசதி, லிப்ட் அல்லது எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

Tags:    

Similar News