உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் காளியம்மன் கோவில் படவேட்டு எல்லையம்மன் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

காளியம்மன் கோவில், படவேட்டு எல்லையம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2022-08-07 08:47 GMT   |   Update On 2022-08-07 08:47 GMT
  • உற்சவர் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம்:

குடியாத்தம் பிச்சனூர் காளியம்மன் பட்டி காளியம்மன் கோவில் தேரோட்டம் இன்று காலையில் நடைபெற்றது.

தேரோட்டத்தை முன்னிட்டு மூலவர் காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றது தொடர்ந்து உற்சவர் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் காலை முதலே நேர்த்திக்கடன் செலுத்த நூற்றுக்கணக்கான ஆடுகளையும் கோழிகளையும் பக்தர்கள் பலியிட்டு காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து தேரின் மீது உப்பு மிளகு உள்ளிட்டவைகளை வீசி எறிந்து வணங்கினர்.

இந்த தேரோட்டத்தில் குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ, குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் நத்தம்பிரதீஷ் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, முன்னாள் அறங்காவலர் குழு நிர்வாகிகள் மற்றும் தேர்திருவிழா குழுவினர், ஆலய விழா கமிட்டினர், அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

குடியாத்தம் டவுன் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா இன்று காலையில் நடைபெற்றது இந்த தேரோட்டத்தை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகர் மன்ற தலைவர் எஸ். சவுந்தரராஜன் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற தலைவர் அமுதாசிவப்பிரகாசம், முன்னாள் அறங்காவலர் குழு நிர்வாகிகள் ஏ.நடராஜன், சண்முகம், வி.என்.தனஞ்செயன். கே.எம்.ஜி.விட்டல், எஸ்.எஸ்.பி.பாபு, நகர மன்ற உறுப்பினர்கள் சுமதி மகாலிங்கம், எம்.எஸ்.குகன், வழக்கறிஞர் எம்.வி. ஜெகதீசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, முன்னாள் அறங்காவலர் குழு நிர்வாகிகள், தேர் கமிட்டியினர் விழா குழுவினர் இளைஞர் அணி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News