உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட காட்சி.

வேலூர் மாவட்டத்தில் 12.74 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்

Published On 2023-01-05 15:17 IST   |   Update On 2023-01-05 15:17:00 IST
  • இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
  • அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் பெயர் சேர்த்தல் நீக்கல் முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்காக கடந்த சில மாதங்களாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது.

முகாமில் ஏராளமான இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு அளித்தனர். இதேபோல் பெயர் நீக்கல் முகவரி மாற்றத்திற்கும் மனு அளித்து இருந்தனர்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது வாக்குச்சாவடி அலுவலர்கள் முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதையடுத்து வாக்காளர் பதிவு அலுவலர் விசாரணை முடித்து வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இைதயடுத்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை வெளியிட்டார். வெளியி டப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் அந்தந்த வாக்கு சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

மனு அளித்த பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சரி பார்த்துக் கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

அதன்படி வேலூர் சட்டமன்ற தொகுதியில் 1,22,140 ஆண் வாக்காளர்களும், 1,31, 821 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 41 பேர் என 2,54,002 பேர் உள்ளனர். காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 1,18, 636 ஆண் வாக்காளர்களும், 1,27,261 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 35 என 2,45, 932 பேர் உள்ளனர்.

அணைக்கட்டு தொகுதியில் 1,24,055 ஆண் வாக்காளர்களும், 1,31,774 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 30 பேர் என 2,55, 859 பேர் உள்ளனர். கே. வி.குப்பம் தொகுதியில் 1,11,357 ஆண்களும், 1,16, 268 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 8 பேர் என 2,27,638 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் 1,40,642 ஆண்களும், 1,50,355 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 43 பேர் என 2,91,040 வாக்காளர்கள் உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 6,16,830, பெண் வாக்காளர்கள் 6,57,479, மூன்றாம் பாலினத்தவர்கள் 157 பேர் என மொத்தம் 12,74,466 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட 41 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

Tags:    

Similar News