உள்ளூர் செய்திகள்

காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆய்வு செய்த காட்சி.

வேலூர் - காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீஸ் குவிப்பு

Published On 2022-06-18 16:20 IST   |   Update On 2022-06-18 16:20:00 IST
  • நாடு முழுவதிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
  • போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆய்வு

வேலூர்:

மத்திய அரசு ராணுவத்தில் ஆட்கள் சேர்ப்பதற்காக அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ரெயில்களுக்கு தீ வைத்து எரிக்க சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் ரயில் எரிப்பு சம்பவத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இதையடுத்து நாடு முழுவதிலும் உள்ள ரெயில் நிலையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காட்பாடி ரெயில் நிலையம் மற்றும் கன்டோன்மென்ட் ரயில் நிலையங்கள் முழுவதும் ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு பயணிகளை கண்காணித்து வருகின்றனர்.

பயணிகளின் உடமைகளை முழு பரிசோதனைக்கு பின்னரே ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News